Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

ரஸ்யாவில் திடீர் குழப்ப நிலை- அரசாங்கத்திற்கு எதிராக கலகம்!

June 25, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
ரஸ்யாவில் திடீர் குழப்ப நிலை- அரசாங்கத்திற்கு எதிராக கலகம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ரஸ்ய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வந்த வோக்னர் ஆயுதக்குழுவினர், ரஸ்ய அரசாங்கத்திற்கு எதிராக
கலகத்தில் ஈடுபட்டுள்ளதைத் தொடர்ந்து ரஸ்யாவில் திடீர் குழப்ப நிலையேற்பட்டுள்ளது.

மொஸ்கோ உட்பட ரஸ்ய நகரங்களில் இராணுவ வாகனங்களை அவதானிக்க முடிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம் ரஸ்ய தொலைக்காட்சி வழமையான நிகழ்ச்சிகளை இடைநிறுத்தி அவசர செய்திகளை
வெளியிடுகின்றது.

ரஸ்யாவுடன் இணைந்து உக்ரைன் படையினருக்கு எதிராக செயற்பட்டுவந்த வோக்னர் ஆயுதகுழுவினர் ரஸ்ய பாதுகாப்பு அமைச்சர் தங்கள் முகாம்கள் மீது எறிகணை தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்ததை தொடர்ந்தே இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

எங்கள் படைமுகாம் மீது ரஸ்ய படையினர் ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டனர். எங்கள் தோழர்கள் பலர்
கொல்லப்பட்டனர் அவர்கள் எங்களை ஏமாற்ற முயல்கின்றனர் என வாக்னர் கூலி;ப்படையின் தலைவ பிரிகோஜின் தெரிவித்திருந்தார்.

எனினும் அவர்களின் இந்த குற்றசாட்டினை ரஸ்ய பாதுகாப்பு அமைச்சர் சேர்ஹே சைய் இதனை மறுத்திருந்தார்.
தொடர்ந்து ரஸ்ய பாதுகாப்பு அமைச்சரை தனது படையினர் அகற்றுவார்கள் என எச்சரித்த வாக்னர் குழுவின் தலைவர்
ரஸ்ய படையினரை தலையிடவேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.

அதேவேளை இது இராணுவசதிப்புரட்சியில்லை நீதிக்கான பயணம் என தெரிவித்த அவர் தனது குழுவினர்
உக்ரைனிலிருந்து ரஸ்யாவிற்குள் நுழைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags: #Confusion#Russia#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

மலைக்கா அரோராவின் எல்லமீறிய கிளாமர்

Next Post

கனடா அரசுக்கு எதிராக மெட்டா நிறுவனம் அதிரடி நடவடிக்கை

Next Post
கனடா அரசுக்கு எதிராக மெட்டா நிறுவனம் அதிரடி நடவடிக்கை

கனடா அரசுக்கு எதிராக மெட்டா நிறுவனம் அதிரடி நடவடிக்கை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.