ஆயுதம் தாங்கிய வீரர்களின் பாதுகாப்போடு ரஷ்ய அதிபர் புதினுக்காக சிறப்பு ரயில் ஒன்று தயாராகி உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சிறப்பு ரயிலில் உடற்பயிற்சிக் கூடம், நீராவிக் குளியல், திரைப்பட அரங்கு, டிவிடி பிளேயர்கள், சுகாதார கூடம், உள்ளிட்ட ஏராளமான வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
60 மில்லியன் பவுண்ட் செலவில் நவீன ரயில்
சுமார் 60 மில்லியன் பவுண்ட் செலவில் இந்த நவீன ரயில் அதிபர் புதினுக்காக தயாராகி வருகிறது.
அதேவேளை விமானங்கள் செல்லும் பாதையை ராடார்கள் மூலமாக கண்டுபிடிப்பதைப் போல இந்த ரயில் செல்லும் பாதையை கண்டுபிடித்துவிட முடியாது எனவும் கூறப்படுகின்றது.
மேலும் ரயிலுக்கு எந்தவிதமான பெயரோ எண்ணோ கிடையாது என்றும், அந்த ரயில் வருவதையும் போவதையும் யாரும் கண்டுபிடித்து விட முடியாது என்றும் கூறப்படுகிறது.
Discussion about this post