ரஷ்ய எண்ணெய் வளங்களை அழிக்கும் முயற்சியில் உக்ரேன் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில் கிராஸ்னோடர் பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது நேற்று ஏவுகைணத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எண்ணெய் கிடங்கு தீப்பிடித்ததில் இரண்டு பேர் காயமடைந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்றுஅதிகாலை கிராஸ்னோடரை குறிவைத்து உக்ரைன் ஏவிய ஐந்து ஏவுகணைகள் மற்றும் 29 ட்ரோன்களை அதன் வான் பாதுகாப்பு அமைப்புகள் அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக ரஷ்யாவின் பல எண்ணெய் கிடங்குகள் உக்ரேனினால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post