முல்லைத்தீவு, மாங்குளத்தில் யுவதி ஒருவர் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (04) மதியம் நடந்துள்ளது. மாங்குளம், கற்குவாரி பகுதியில் வசிக்கும் யுவதியே இந்தத் தவறான முடிவை எடுத்துள்ளார்.
21 வயதுடைய திருச்செல்வம் நிதர்சனா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் இந்த யுவதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தாய் வீட்டுக்குச் செல்வதாக கூறிச் சென்ற யுவதி ரயிலில் முன் பாய்ந்துள்ளார்.
யுவதியின் உடல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Discussion about this post