கொழும்பு, யாழ்ப்பாணம் கடுகதி ரயில் சேவையால் ஒரு தடவை பயணத்துக்கு 3 லட்சம் ரூபா இழப்பு ஏற்படுகின்றது என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ரயில் கட்டணம் அதிகரிக்கப்படுமா என நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.
ரயில் போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதற்கு டீசலுக்கு அதிகம் செலவிடவேண்டியுள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கு இரவு நேர கடுகதி ரயில் சேவையை முன்னெடுப்பதற்கான முயற்சி எடுக்கப்படுகின்றது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கு எரிபொருளுக்காக மட்டும் 13 லட்சம் ரூபா செலவிடப்பட வேண்டும்.
500 பேர் பயணித்தால், பயணியொருவரிடம் 2 ஆயிரம் ரூபா அறிவித்தால் 10 லட்சம் ரூபாதான் கிடைக்கும். எனவே, ஒரு தடவை பயணத்துக்கு 3 லட்சம் ரூபா நஷ்டம் ஏற்படுகின்றது.
எனவே, ரயில் கட்டணத்தை, பஸ் கட்டணத்தில் பாதியாகக் கொண்ட பொதுக் கொள்கையொன்றை உருவாக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Discussion about this post