கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், ரம்புக்கனை பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் ரம்புக்கனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
ரம்புக்கனை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர், சாட்சியாளர்களிடம் சுயாதீன விசாரணைகளை நடத்தவும் நீதிமன்ற விசாரணைகளில் கலந்துகொள்ள சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கிலுமே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ரம்புக்கனை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். சிலர் காயமடைந்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸ்மா அதிபர் குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளார்.
Discussion about this post