அடுத்த வாரம் அரசாங்கம் பட்டாசு கொளுத்தி பால் சோறு உண்பதற்கு தயாராகவுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டிசில்வா (Harsha de Silva) தெரிவித்தார்.
இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளதாக எதிர்வரும் 27 அல்லது 28ஆம் திகதிகளில் அதிபர் ரணில் (ranil)அறிவிக்கவுள்ள நிலையில், இந்த கொண்டாட்டங்களை நாடளாவிய ரீதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வங்குரோத்து நிலையிலிருந்து மீண்ட இலங்கை
இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு சர்வதேச நிதிச் சந்தையில் முக்கிய அங்கத்துவ நாடாக மாறியுள்ளதாக ரணில் அறிவிக்கவுள்ளதாகவும் அதேவேளை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அவர் அறிவிக்கவுள்ளதாகவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
பொய் சொல்ல வேண்டாம்
எவ்வாறாயினும், ஒரு நாடு திவாலானதா இல்லையா என்பதை சர்வதேச கடன் தர நிர்ணய முகவர் நிலையங்களே தீர்மானிக்கின்றன என்றும் மக்களுக்கு பொய் சொல்ல வேண்டாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Discussion about this post