இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை பதவியேற்றுள்ள நிலையில், அவருடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.
பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற சில நிமிடங்களில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தனது டுவீற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவொன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவது தொடர்பாக நாம் எதிர்பார்த்திருக்கின்றோம்.
அவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளமையும், அனைவரையும் உள்ளடக்கிய புதிய அரசாங்கத்தை உருவாக்குவதும் நெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்கான ஸ்திரதன்மையை ஊக்குவிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகளாகும்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களிலும், இலங்கையர்களுக்குத் தேவையான நீண்டகால தீர்வுகளிலும் அர்த்தபூர்வமான முன்னேற்றங்களை நாம் ஊக்குவிக்கின்றோம் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தனது டுவீற்றர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Discussion about this post