தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐந்து பேர் தற்போது அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியில் அந்தக் கூட்டணியில் இருந்து ஐந்து எம்.பி.க்கள் மாத்திரமே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே எதிர்வரும் தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு வடக்கில் எதனையும் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சின் வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Discussion about this post