Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ரணில் தொடர்பில் முடிவை மாற்றப் போகும் மகிந்த – அதிரடியாக வெளியான அறிவிப்பு

August 2, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
ரணில் தொடர்பில் முடிவை மாற்றப் போகும் மகிந்த – அதிரடியாக வெளியான அறிவிப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஶ்ரீலங்கா பொதுஜன எடுத்துள்ள முடிவை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டால் முடிவை மாற்றுவோம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, “நாங்கள் கட்சியாக தனித்து செல்கிறோம், தனி வேட்பாளரை நிறுத்துகிறோம், ஆனால் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுகிறோம்.

மகிந்தவின் முடிவுஎங்களுடைய கட்சி எடுத்துள்ள முடிவை மீண்டும் மாற்றுமாறு கேட்டால் நாங்கள் அதனை செய்வோம். வெற்றி என்பதே எங்களுக்கு முக்கியமானதாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கூறுகையில், “2015ஆம் ஆண்டிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பலர் சென்றனர். சில பேருடன் எஞ்சியிருந்தோம். அந்த குழுவுடன் இணைந்து மிகப்பெரிய கட்சியை உருவாக்கி மகிந்த ராஜபக்சதலைமையில் தேர்தலிலும் வெற்றிபெற்றோம்.இம்முறையும் அதுதான் நடக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஶ்ரீலங்கா பொதுஜன ஐக்கிய பெரமுனவின் 19 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் மக்கள் பிரதிநிதிகளின் கூட்டம் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

பிரதிநிதிகள் புறக்கணிப்புகொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, மாத்தளை, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, பதுளை, மொனராகலை, அம்பாறை, திருகோணமலை, குருநாகல், புத்தளம், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் பிரதிநிதிகள் இதற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், அறிவிப்பு விடுக்கப்பட்டபோதிலும் சில பொதுப் பிரதிநிதிகள் இதனைப் புறக்கணித்திருந்தனர்.இந்தக் கூட்டத்தில் கட்சியின் ஸ்தாபகரும், கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் 7ஆம் திகதி அறிவிக்கப்படுவார் என தெரியவந்தது. ஆனால் மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து சென்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுரக்ஷா காப்பீட்டு வேலைத்திட்டம் : கல்வி அமைச்சு அறிவிப்பு

Next Post

இலங்கையில் அரிசியால் ஏற்பட்டுள்ள ஆபத்து: வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

Next Post
இலங்கையில் அரிசியால் ஏற்பட்டுள்ள ஆபத்து: வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையில் அரிசியால் ஏற்பட்டுள்ள ஆபத்து: வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.