எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக பரந்துபட்ட கூட்டணியை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சியுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார (Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க வெளியேறி பொதுத் தேர்தல் தொடர்பாக கட்சியின் ஏனைய குழுக்களுடன் கலந்துரையாடலாம் என தெரிவித்த போதிலும் ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து நல்ல பதில் கிடைக்கவில்லை எனவும் பொதுச் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தை நிறுத்தம்
அத்துடன், ஐக்கிய தேசிய கட்சியில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் இருப்பதால், அவர்களுடன் கூட்டணி வைப்பது பிரச்சினையாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை ஐக்கிய தேசியக் கட்சியுடனான பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தல்
ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைவருக்கும் எதிர்வரும் தேர்தலுக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி அடுத்த பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான வேலைத்திட்டங்களைத் தயாரிக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post