ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வர்த்தமானி மூலம் பிரகடனப் படுத்தப்பட்ட அவசரகால சட்டம் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்துக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
கடந்த 17 ஆம் திகதி, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.
சட்ட விதிகளுக்கு அமைய, 14 நாள்களுக்குள் நாடாளுமன்றத்தின் அனுமதி பெறப்படாவிட்டால், அவசரகால நிலைமைப் பிரகடனம் இரத்தாகிவிடும்.
இந்தநிலையில், அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
Discussion about this post