ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க(Patali Champika Ranawaka), சரத் பொன்சேகா(Sarath Fonseka), ராஜித சேனாரத்ன(Rajitha Senaratne )உள்ளிட்ட பல உறுப்பினர்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன்(Ranil Wickremesinghe) இணைந்து கொள்ளத் தயாராக இருப்பதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அண்மையில், ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB)நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஒரு பொது நிகழ்வில் அதிபர் ரணிலுடன் நெருக்கமான உரையாடலில் ஈடுபட்டதுடன் தற்போதைய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
சரத் பொன்சேகா மீது விமர்சனம்
மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை(Sajith Premadasa) அண்மையில் நாடாளுமன்றத்தில் மறைமுகமாக விமர்சித்ததை தொடர்ந்து கட்சி உறுப்பினர்களின் விமர்சனங்களை எதிர்கொண்ட சரத் பொன்சேகா அதிபர் ரணிலுக்கு ஆதரவாக சாய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், தற்போதைய அரசாங்கத்தின் முன்முயற்சிகளுக்கு நடுநிலையான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் அதிபர் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சரவை மாற்றம்
இந்த அரசியல்வாதிகள் அதிபர் விக்ரமசிங்கவுடன் கைகோர்க்க எதிர்பார்க்கும் உத்தியோகபூர்வ விழா இந்த வார இறுதியில் நடைபெறவுள்ளது.
இதனிடையே அடுத்து வரும் வாரங்களில் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் கொழும்பு அரசியல் வட்டாரத்தில் பேச்சடிபடுவதாகவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
Discussion about this post