பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று 14) ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையைசூழ பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நாட்டில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள், 17 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வு, புதிய அரசு மற்றும் அமைச்சரவை உட்பட முக்கிய சில விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
இக்கூட்டத்துக்கு பொலிஸ்மா அதிபரும் அழைக்கப்பட்டிருந்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், கொள்கை ரீதியிலான முரண்பாடுகள் இருந்தாலும், நிபந்தனைகளின்றி அவர் பிரதமர் பதவியை ஏற்றதாலும், நாட்டு நலன் கருதியும் அவருக்கு ஆதரவு வழங்குவதற்கு மொட்டு கட்சி உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
இதன்படி பிரதமருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
Discussion about this post