கொழும்பில் (Colombo) இருந்து இரண்டு உயர் ரக வெள்ளைக்குதிரைகள் தற்போது அம்பாறை (Ampara) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பிரதான வீதிகளில் உலா வருவதாக தகவல் கிடைத்துள்ளது.ஜனாதிபதித் தேர்தலில் போட்டி இடும் ரணில் விக்ரமசிங்கவினை (Ranil Wickremesinghe) ஆதரித்து குறித்த குதிரைகள் தினமும் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.மேலும் ரணில் விக்ரமசிங்கவின் பிரசார கூட்டங்கள் இடம்பெறுகின்ற இடங்களை மையப்படுத்தி குறித்த இரு குதிரைகளும் காட்சிப்படுத்தப்பட்டு வருவதுடன் வித்தியாசமான முறையில் மக்களிடம் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கவர்ந்திழுக்கும் முயற்சிஇதேவேளை, இன்று சம்மாந்துறை பகுதியில் ரணில் விக்ரமசிங்கவினை ஆதரித்து நடைபெறவுள்ள கூட்டத்திற்கு மன்னர் கூட்ட அழைப்பிற்காக குதிரைகளை ஏற்பாட்டாளர்கள் காட்சி பொருளாக பயன்படுத்தி மக்களை கவர்ந்திழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸ் கட்சியின் சின்னம் குதிரை என்பதுடன் இம்முறை இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவினை அவர் ஆதரிப்பதும் குறிப்பிடத்தக்கது.
Discussion about this post