எந்த அரசாங்கம் ஆட்சியமைத்தாலும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் கலந்துக்கொண்ட பின்னர் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியில் வரும் சமயத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிகளவு வாக்குகள் கிடைத்தன, அதனால் அவர் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார் என்று குறிப்பிட்ட மஹிந்த ராஜபக்ச, எமது கட்சியின் சார்பில் டலஸ் அழகப் பெருமவை நிறுத்தினோம், வாக்களித்தார்கள் ஆயினும் அவர் தோற்றுவிட்டார் என்று தெரிவித்தார்.
Discussion about this post