ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பில் வெளியிட்ட கருத்து பொய்யானது என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்ததாக தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள சுமந்திரன் அது பொய்யான கூற்று என குறிப்பிட்டுள்ளார்.
“ஜனாதிபதி பொய் சொல்கிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வகையில் நாங்கள் ஒருமனதாக டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்கத் தீர்மானித்தோம். ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிப்பதாக நாங்கள் யாரும் கூறவில்லை” என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
Discussion about this post