இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படுவதற்கு தேசிய மக்கள் சக்தி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஓமல்பே சோபித தேரர் ஆகியோருக்கு இடையே இன்று பிற்பகல் சந்திப்பொன்று நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த அநுரகுமார திசாநாயக்க, பொதுமக்களின் உண்மையான அபிப்பிராயம் தொடர்பான எந்தவிதக் கரிசனையும் இன்றி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஆகியோர் தீர்மானம் எடுத்துள்ளனர் என்று தெரிவித்தார்.
மக்களின் கோரிக்கைகள் செவிமடுக்கப்படாது இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த அநுரகுமார, ரணில் என்பவர் எப்போதும் ராஜபக்சக்களைப் பாதுகாப்பவர் என்றும், கடந்த காலங்களில் ரணிலை ராஜபக்சக்கள் பாதுகாத்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு தரப்பும் ஒருவருக்கொருவர் நம்பிக்கைக்குப் பாத்திமாக இருக்கின்றனரே தவிர, பொது மக்களின் கருத்துக்களைச் செவிமடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post