ஜனாதிபதி தேர்தல் சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின்(ranil wickremesinghe) நடவடிக்கைகளால் பொதுஜன பெரமுனவின் பெருமளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன் உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்(mujibur rahman) தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பிரசார கூட்டங்களில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவை(anura kumara dissanayaka) ஊக்குவிக்கும் நடவடிக்கை காரணமாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 80 பேர் நாட்டை விட்டு வெளியேற விமான டிக்கெட்டை பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரணில் வெற்றிபெற மாட்டார்ஜனாதிபதி தேர்தலில் விக்ரமசிங்க வெற்றிபெற மாட்டார் என்பதை அறிந்ததன் காரணமாகவே இந்த எம்.பி.க்கள் நாட்டை விட்டு வெளியேற தீர்மானித்துள்ளனர் என ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.
“விக்ரமசிங்க, அனுரகுமார திஸாநாயக்கவை ஊக்குவிப்பதாகவும், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஆட்சிக்கு வராமல் இருப்பதை உறுதி செய்வதாகவும் தெரிகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
Discussion about this post