நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டதன் பின்னர் ஜனாதிபதி நிதியமைச்சர் பதவியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சட்டத்திருத்தத்தின்படி, ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் பதவியை மட்டுமே வகிக்க முடியும்.
ஒரு அமைச்சுக்கு ஒருவர் நியமிக்கப்படவில்லை என்றால் ஜனாதிபதி அந்த அமைச்சின் செயல்பாடுகளை 14 நாள்களுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும்.
தற்போது ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக நிதியமைச்சர் பதவியையும் வகிக்கின்றார். அதனால் அவரிடம் இருந்து நிதியமைச்சு பறிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
Discussion about this post