உயர் நீதிமன்றத்தால், சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வது சம்பந்தமான அனைத்து ஆவணங்களும் தயார் செய்யப்பட்டுள்ளன என்று காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த ஆவணங்கள் அடங்கிய கோப்புக்கு சட்டமா அதிபரின் ஒரு பரிந்துரை அவசியமாக இருக்கின்றது. அது கிடைத்தவுடன் ஜனாதிபதி ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யும் கடிதத்தில் கையெழுத்திடுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கரை ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post