சிறையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவை விட அதிகமான தவறு செய்தவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும், ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானது என்றும் காரியவசம் தெரிவித்தார்.
Discussion about this post