பண்டோரா பேப்பர்ஸ் சம்மந்தமாக நடைபெறும் விசாரணைகளுக்காக மறியலில்
உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம்
வாக்குமூலம் பெறுவதற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முடிவெடுத்துள்ளது
ரஞ்சன் ராமநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமையவே இவ் வாக்குமூலம்
எடுக்கப்பட்டதாக ஆணைக்குழு கூறீயுள்ளது.
சட்டத்தரணியூடாக சத்தியக்கடதாசிஊடாக வாக்குமூலம் வழங்குமாறு அவருக்கு
அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.
‘பண்டோரா பேப்பர்ஸ்’ சமந்தமான விசாரணைகளுக்காக நிருபமா ராஜபக்ஸ மற்றும்
திருக்குமார் நடேசன் போன்றொரிடம் மாத்திரமே வாக்குமூலம் எடுக்கப்பட்டுள்ளது.
இவ் விசாரணைகளுக்காக உள்நாட்டு வணிக வங்கிகள், அரச வங்கிகள் மற்றும் வரி
வருமான திணைக்களத்திடம் ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன.
Discussion about this post