நீதிமன்ற அவமதிப்பு வழங்கில் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொதுமன்னிப்பில் விடுவிக்கப்படுவார் என்று தெரியவருகின்றது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவரைப் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
ரஞ்சன் ராமநாயக்கவை விடுவிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தபோதும், அவர் அதைக் கவனத்தில் எடுக்கவில்லை.
தற்போது மக்கள் எதிர்ப்பால் கோத்தாபய ராஜபக்ச, நாட்டை விட்டுத் தப்பிச் சென்று சிங்கப்பூரில் தங்கியுள்ளார்.
Discussion about this post