சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌதர்யா – விசாகன் இருவரும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு கடந்த ஆண்டு ஒரு அழகிய ஆண் குழந்தைக்கும் பிறந்தது. குழந்தையின் புகைபடங்கள் கூட வைரலானது. இந்நிலையில், இன்று விசாகனின் சொந்த ஊரான சூலூரில் குழந்தைக்கு இன்று காது குத்தி, பெயர் சூட்டியுள்ளனர்.
ரஜினியின் பேரனுக்கு ரஜினி என பெயர் சூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் இந்த விழாவிற்கு வரவில்லை என்றாலும், அவருடன் அண்ணன் சத்தியநாராயணன் கலந்துகொண்டுள்ளார்.
Discussion about this post