முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா (Sarath Fonseka), யுத்த களத்தில் மாத்திரமின்றி அரசியல் களத்திலும் வரலாற்று வெற்றியை பதிவு செய்வார் என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கொழும்பு (Colombo), தாமரை தடாகத்தில் இன்று (28) நடைபெற்ற பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ‘இராணுவத் தளபதி நாட்டுக்கு வழங்கிய வாக்குறுதி’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து உரையாற்றும் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “சரத் பொன்சேகாவின் சேவை இராணுவத் தளபதியாகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ முடிந்துவிடப் போவதில்லை.
யுத்த நிறைவு
பீல்ட் மார்ஷல் பொன்சேகா வழங்கிய வாக்குறுதிக்கமைய இராணுவத் தளபதியாக பொறுப்பேற்று 3 தசாப்தகால யுத்ததத்தை நிறைவு செய்தார்.
அதன் காரணமாகவே அவர் பீல்ட் மார்ஷலாக தரமுயர்த்தப்பட்டார். இலங்கையில் பீல்ட் மார்ஷலாக செயற்பட்ட ஒரேயொரு இராணுவத் தளபதி அவர் மாத்திரமே.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் (Jaffna) அமைதியை நிலைநாட்ட வேண்டிய தேவை காணப்பட்டது. அதற்காக அங்கு இராணுவத்தின் ஒரு முழுமையான படையணி கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டது.
அரசியல் வெற்றி
ஆனால் நான் சரத் பொன்சேகாவையே நியமித்தேன். காரணம் பொன்சேகா என்ற ஒரு நபர் ஒரு படையணிக்கு சமமானவர் என்பதால் ஆகும்.
யுத்த களத்தைப் போன்று அரசியலிலும் பல்வேறு பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டுள்ளார். சவால்களையும் சந்தித்துள்ளார். அவற்றில் வெற்றியும் பெற்றுள்ளார்.
அதேபோன்று எதிர்காலத்திலும் அவர் நிச்சயம் வெற்றியைப் பதவி செய்வார். எனவே அவரது சேவை நின்று விடப் போவதில்லை. நாட்டுக்கு சேவை செய்வதற்கு அவருக்கு இன்னும் பல வாய்ப்புக்கள் உள்ளன” என தெரிவித்துள்ளார்.
Discussion about this post