யாழ் மேயரின் அரசியல் பழிவாங்கல்களைக் கண்டித்து கோரோனோ நெருக்கடியிலும் யாழ் மாநகரசபையின் முன்பாக மாநகர சபை உறுப்பினர்கள் போராட்டம்!
இந்தவருட ஆரமப்த்தில் யாழ் மாநகர மேயராக மணிவண்ணன் தெரிவாகி இருந்தார், இவருக்கு ஈபிடிபி மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவு வழங்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது, எனினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களை பழிவாங்குவதற்காக அவர்கள் வட்டாரத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த 30லட்சம் ரூபா நிதியை நிறுத்துமாறு மாநகரசபை அதிகாரிகளுக்கு உத்தரவை பிறப்பித்திருந்தார். அரசியல்ரீதியில் பழிவாங்கல்களுக்கு எதிராக யாழ் மாநகரசபையின் 02 உறுப்பினர்கள் இன்று யாழ் மாநகரசபையின் முன்பாக அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். வட்டார வேலைத்திட்டங்களை நிறுத்துமாறு ழ் மாநகர மேயர் சபை அதிகாரிகளுக்கு பிறப்பித்த கடிதத்தினையும் இங்கு பார்வையிடலாம் .
Discussion about this post