யாழ்ப்பாணம் (Jaffna) – மாதகல் கடலில் நேற்று காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனின் சடலமானது இன்று (05.9.2024) காலை கரையொதுங்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாதகல் பகுதியை சேர்ந்த நாகராஜா பகீரதன் என்ற 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
படகு திடீரென விபத்து
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இரண்டு இளைஞர்கள் நேற்று அதிகாலை கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர்.
இதன்போது அவர்கள் பயணித்த படகு திடீரென விபத்துக்குள்ளானது.இந்நிலையில், படகில் பயணித்த ஒருவர் நீந்திக்கொண்டிருந்த வேளை அருகே வந்த படகின் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளார்.மற்றைய இளைஞர் காணாமல் போனார். இவ்வாறு காணாமல் போனவரின் சடலம் இன்று கரையொதுங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post