Tuesday, June 10, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

March 30, 2024
in இலங்கை
யாழ் போதனா வைத்தியசாலை வெளியிட்டுள்ள அறிவிப்பு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு மாலை ஆறு மணி வரை செயற்படும் என வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை (29) மாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

போயா தவிர்ந்த கிழமை நாட்களில்
யாழ் போதனா வைத்தியசாலையில் வெளி மாவட்டங்களில் இருந்து வெளிநோயாளர் பிரிவில் அதிகளவில் சிகிச்சை பெறுவதற்கு வருகிறார்கள். அதன் காரணமாக வெளி நோயாளர் பிரிவை போயா தவிர்ந்த கிழமை நாட்களில் மாலை 6 மணி வரை செயற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

வைத்தியசாலையின் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கு இட வசதி மற்றும் ஆளணி எமக்குள்ள ஒரு பாரிய சவாலாக விளங்குகிறது. இருந்த போதும் எம்மிடம் காணப்படுகின்ற வளங்களை உரிய முறையில் பயன்படுத்தி சேவையாற்றி வருகிறோம்.

எமது தேவைப்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் எடுத்துரைத்துள்ளோம் அவர் எமது தேவைகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என அவர் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

மேலும் இந்த கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு தலைவர் வாழ்நாள் பேராசிரியர் பொன் பாலசுந்தரம் பிள்ளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா வைத்தியசாலை கணக்காளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post

காதில் சிகிச்சை பெற சென்ற நபருக்கு நிகழ்ந்த சோகம்!

Next Post

ரஷ்ய ராணுவத்தில் இணையும் இலங்கையர்கள்

Next Post
ரஷ்ய ராணுவத்தில் இணையும் இலங்கையர்கள்

ரஷ்ய ராணுவத்தில் இணையும் இலங்கையர்கள்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.