யாழ். போதனா வைத்தியசாலை (Teaching Hospital Jaffna) வெளிநோயாளர் பிரிவில் அரச தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு என சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி (Thangamuthu Sathiyamoorthy) தெரிவித்துள்ளார்.
அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே வைத்தியசாலை பணிப்பாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், போதனா வைத்தியசாலையில் வழங்கும் சேவைகளில் முக்கிய ஒரு சேவையாக விளங்குவது வெளிநோயாளர் பிரிவு ஆகும்.
நூற்றுக்கணக்காண நோயாளர்கள்
வெளிநோயாளர் பிரிவிலே நாள்தோறும் நூற்றுக்கணக்காண நோயாளர்கள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
வெளிநோயாளர் பிரிவானது வார நாட்களில் காலை 7:00 மணிதொடக்கம் மாலை 6:30 மணி வரையும் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் காலை 7:00 மணி தொடக்கம் 12:00 மணிவரையும் தனது சேவையினை வழங்கி வருகின்றது.
அந்தவகையில், அரச தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் வெளிநோயாளர் பிரிவில் சேவை பெற வேண்டுமாயின் மாலை 4:00 மணியில் இருந்து 6:30 மணி வரை சேவையினை பெற்றுக் கொள்ளலாம் என வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Discussion about this post