யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என இரத்த வங்கி அறிவித்துள்ளது.
நாளுக்கு நாள் குருதி விநியோகம் அதிகரித்துச் செல்வதினால் இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் இரத்த வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “18 – 55 வயதிற்கு இடைப்பட்ட, 50 Kg ம் அதற்கு மேற்பட்ட நிறையும் கொண்ட ஆண் பெண் இருபாலாரும் எவ்வித பிரச்சனையுமின்றி இரத்ததானம் செய்யலாம்.
ஏற்கனவே இரத்ததானம் செய்தவர்கள் எவ்வித நோய்களுமின்றி இருந்தால் 60 வயது வரை இரத்ததானம் செய்யலாம்.
எனவே தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு ஏற்கனவே இரத்ததானம் செய்து நான்கு மாதங்கள் நிறைவடைந்தவர்களும் புதிதாக இரத்ததானம் செய்ய விரும்புவர்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிக்கு வருகை தந்து இரத்ததானம் செய்து உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன் உங்கள் ஊர்களிலும் இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்து எமக்கு அறிவித்தால் நாம் வருகை தந்து குருதியை சேகரிக்கும் பணிகளை முன்னெடுப்போம்.
எம்முடன், 0772105375 அல்லது 0212223063 எனும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்” என அறிவித்துள்ளனர்.
Discussion about this post