Friday, May 30, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழ்.போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியரின் மோசமான செயல்! தவிக்கும் நோயாளர்கள்!

September 26, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
யாழ்.போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியரின் மோசமான செயல்! தவிக்கும் நோயாளர்கள்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜ் கடந்த 6 நாட்களாக விடுதிக்கு வருகை தராமையினால் நோயாளிகள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 2 நரம்பியல் வைத்திய நிபுணர்கள் கடமையாற்றி வருகின்றனர்.

அந்தவகையில் வைத்திய நிபுணர் திருமதி. கவிதா மற்றும் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜ் ஆகியோர் கடமையாற்றுகின்றனர்.

வைத்திய நிபுணர் திருமதி. கவிதா நாளாந்தம் வைத்தியசாலை விடுதிக்கு சென்று தனது நோயாளிகளை பார்வையிட்டு வருகின்றார்.

இதேவேளை, வைத்திய நிபுணர் அஜந்தா சீராக வைத்தியசாலை விடுதிக்கு சென்று நேயாளர்களை பார்வையிடுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.வைத்திய நிபுணர் அஜந்தா கடந்த 18.09.2024 திகதி அன்று இறுதியாக வைத்தியசாலை விடுதிக்கு வந்து, மிகவும் குறுகிய நேரம் நோயாளிகளை பார்வையிட்டு சென்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதற்கு பின்னர் கடந்த திங்கட்கிழமை வரை (23.09.2024) வைத்தியசாலை விடுதிக்கு வந்து நோயாளிகளை பார்வையிடவில்லை என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வைத்திய நிபுணர் அஜந்தாவின் கண்காணிப்பின் கீழ் உள்ள நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஆகையால் நோயாளிகள் நோயின் வீரியத்தால் மிகவும் இன்னல்களை அனுபவிக்கின்றனர்.குறித்த வைத்திய நிபுணர் யாழில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றின் இயக்குனராக கடமையாற்றி வருகின்றார்.இந்நிலையில் அவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கடமை புரிய வேண்டிய நேரத்தில் தனது தனியார் மருத்துவமனையில் சேவை புரிகின்றாரா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

வைத்திய நிபுணர் அஜந்தா தமது தனியார் வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளிகளுக்கு கட்டணம் அறவிட்ட பின்னர் அவர்களை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி அங்கு வைத்து சிகிச்சை வழங்குவதாகவும், அவர்களுக்கு சிறப்பு கண்காணிப்பு வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களது வரிப்பணத்தில் சம்பளத்தினை பெறுகின்ற அரச அதிகாரிகள் இவ்வாறு தமது சேவையை துஷ்பிரயோகம் செய்வது கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

இந்த விடயங்கள் வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்திக்கு தெரிந்து நடக்கின்றனவா? அல்லது தெரியாமல் நடக்கின்றனவா? என மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே இவ்வாறான முறைகேடுகள் இடம்பெறாமல், மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையுமாக உள்ளது

Previous Post

குரு பெயர்ச்சியால் செல்வம் பெறப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்

Next Post

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தீவிரமாக தேடும் அந்ந நபர் யார்?

Next Post
வட மாகாண ஆளுநர் நியமனம்: முன்னாள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு வாய்ப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தீவிரமாக தேடும் அந்ந நபர் யார்?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.