யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய், உடுவில் பிரதேச செயலர் பிரிவுகளில் தலா 150 சிலிண்டர்கள் வீதம் இன்றும் விநியோகம் செய்யப்படவுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
லிட்ரோ நிறுவனம் நாடு முழுவதும் 50 ஆயிரம் சிலிண்டர்களை நேற்றுமுன்தினத்திலிருந்து விநியோகித்து வருகின்றது. அதற்கு அமைவாக யாழ்ப்பாண மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் 850 சிலிண்டர்கள் வழங்கப்பட்டிருந்தன.
அவற்றில் யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலர் பிரிவுகளுக்கு தலா 300 சிலிண்டர்கள் வீதம் 600 சிலிண்டர்களும், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட ஏனையவற்றுக்கு 250 சிலிண்டர்களும் விநியோகிக்கப்பட்டிருந்தன.
இன்றைய தினமும் 600 சிலிண்டர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் விநியோகிக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம், நல்லூர், உடுவில், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுகளுக்கு தலா 150 சிலிண்டர்கள் வீதம் வழங்கப்படவுள்ளன.
அத்துடன் வர்த்தக நிலையங்கள் உள்ளிட் ஏனைய விநியோகத்துக்காக 150 சிலிண்டர்கள் வழங்கப்படவுள்ளன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பங்கீட்டு அட்டைக்கு கிராம அலுவலர்களின் கண்காணிப்பிலேயே எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன.
வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட ஏனையவற்றுக்கான விநியோகம், யாழ்ப்பாண மாவட்டத்துக்கான எரிவாயு விநியோகஸ்தர் ஊடாக நேரடியாகவே மேற்கொள்ளப்படுகின்றது.
Discussion about this post