புதிய இணைப்பு
இந்தியா (India) – நாகபட்டினத்தில் (Nagapattinam) இருந்து காங்கேசன்துறைக்கான (Kankesanturai) பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வெற்றிகரமாக ஆரம்பமாகியுள்ளது.
குறித்த கப்பல் இன்று 47 பயணிகளுடன் இலங்கை (srilanka) காங்கேசன்துறைக்கு தனது பயணத்தை தொடங்கிய உள்ளது.
கப்பல் சேவையை நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாய ஆகியோர் கொடி அசைத்து கப்பல் பயணத்தை தொடங்கி வைத்தனர்.
முதலாம் இணைப்பு
இந்தியா (India) – நாகபட்டினத்தில் (Nagapattinam) இருந்து காங்கேசன்துறைக்கான (Kankesanturai) பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகபட்டினம் முதல் காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று (16) முதல் மீள ஆரம்பிக்கப்படவிருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
சோதனை ஓட்டம்
கடந்த 10ஆம் திகதி ‘சிவகங்கை’ பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் நடைபெற்றிருந்த நிலையில் அன்றைய தினம் காலை 8 மணியளவில் நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல், நண்பகல் 12 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.
இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வருடம் ஒக்டோபர் 23ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post