யாழ் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு பொற்பதி பகுதியில் படகு ஒன்று கரையொதுங்கியுள்ளது.
குறித்த படகு கரை தட்டுவதை கண்ட பிரதேச மீனவர்கள், பருத்தித்துறை பொலிஸ், மற்றும் பாதுகாப்பு தரப்புக்களுக்கு அறிவித்ததையடுத்து குறித்த படகை கரையேற்றியுள்ளனர்.
இதேவேளை, இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த படகு இலங்கையில் பயன்படுத்துவது இல்லை என்றும் இது இந்தியா படகாக இருக்கலாம் எனவும் பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post