காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (7) யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வரவேண்டும் வரவேண்டும் ஐ.நா. அமைதிப்படை வரவேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி!, அரசியல் கைதிகளை நிபந்தனையில்லாமல் விடுதலை செய்!, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு, சர்வதேசமே நாம் அழுவது கேட்கவில்லையா?, வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும், தமிழரின் படுகொலைக்கு அனைத்துலக விசாரணை வேண்டும், எங்கே எங்கே உறவுகள் எங்கே? என்பன போன்ற கோசங்களுடன் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
Discussion about this post