யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியில் நேற்று நடந்த ரயில் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மானிப்பாய் வீதி, ஓட்டுமடத்தைச் சேர்ந்த 55 வயதான ஒருவரே உயிரிழந்தார் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதியே இவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Discussion about this post