யாழ்ப்பாணத்தில் கிணறு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொன்னாலை பிள்ளையார் கோவிலடியில் உள்ள குளத்திற்கு அருகாமையில் உள்ள கிணற்றிலிருந்தே இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மூளாய் – வேரம் பகுதியைச் சேர்ந்த கிருஸ்ணமோகன் கிருசாந்தன் (வயது 21) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இளைஞர் கடந்த 5 மாதங்களாக பொன்னாலையில் உள்ள சித்தப்பா வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது 21வது பிறந்ததினம் நேற்றாகும். நேற்றிரவு அவர் காணாமல் போயுள்ளார். உறவினர்கள் அவரை தேடும் பணிகளை முன்னெடுத்து வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் பல மாதங்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த மரணம் குறித்து வட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post