யாழ்ப்பாணத்தில் விஷ ஜந்து தீண்டியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் கைதடி வடக்கை சேர்ந்த 45 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.காணியொன்றினை துப்பரவு செய்து கொண்டிருந்த வேளை விஷ ஜந்து இவரை தீண்டியுள்ளது.
இதனையடுத்து குறித்த குடும்பஸ்தர் , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.
Discussion about this post