கொழும்பு – யாழ்ப்பாணம் காங்ககேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு ரயில் பாதையில் திட்டமிடப்பட்ட இரண்டாம் கட்ட பராமரிப்புப் பணிகள் மஹவ மற்றும் அனுராதபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்படவுள்ளது.
பராமரிப்பு பணிகள் 2024 ஜனவரி 7 முதல் மேற்கொள்ளப்படும் எனவும் ஆறு மாதங்களுக்குள் இதனை முடிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.
இக் காலப்பகுதியில் கொழும்பு கோட்டையில் இருந்து மஹவ புகையிரத நிலையம் வரையிலும் காங்கேசன்துறையிலிருந்து அனுராதபுரம் வரையிலும் மாத்திரம் ரயில்கள் இயங்கும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
Discussion about this post