Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழில் ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்!

October 18, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
யாழில் ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் 20 ஆம் திகதி அரசியல் கட்சிகளால் வடக்கு கிழக்கு மாகாணங்களை முடக்கி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில்  ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று புதன்கிழமை (18) யாழ்ப்பாணம் – தென்மராட்சி பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

இந்த துண்டு பிரசுரங்களானது தென்மராட்சி மக்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பினால் வழங்கப்பட்டு வருகிறதாக  தெரிவிக்கபப்ட்டுள்ளது. அந்த துண்டு பிரசுரங்களில் ,

யாழில் ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்! | Distribution Of Pamphlets Protesting Hartal

ஒன்று சேர முடியாத தமிழ் கட்சிகள்

இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் வடக்கு கிழக்கை முடக்கி ஹர்த்தால் போடுவதன் மூலம் பாதிக்கப்படுவது யார்? இந்த ஹர்த்தால் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைக்கப்போகும் தீர்வு என்ன?

காலங்காலமாக போடப்பட்ட ஹர்த்தால் மூலம் தமிழ் மக்கள் அடைந்த இலாபம் என்ன? தெற்கை முடக்கினால் வரவேற்கத்தக்கது. ஆனால் வடக்கு கிழக்கை முடக்கி மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் செயற்படுவது வரவேற்கத்தக்கதன்று.

நாட்டில் தொடரும் வங்குரோத்து நிலையில் வியாபாரிகள் வியாபாரம் இல்லாது அல்லாடி வரும் நிலையில் இவ்வாறான கடையடைப்பின் மூலம் கிடைக்கப்போரும் நன்மை என்ன என வியாபாரிகளும் விசனம் தெரிவித்து வருவதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு இடர்களைக் கடந்து மீண்டு வந்த மக்களுக்கு அடுத்த பேரிடியாக பொருளாதாரா நெருக்கடி ஏற்பட்டது. இதிலிருந்து மீள முடியாமல் மக்கள் திண்டாடி வரும் நிலையில் இவ்வாறான ஹர்த்தால் எவ்வகையில் நியாயமானது?

யாழில் ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்! | Distribution Of Pamphlets Protesting Hartal

ஒன்று சேர முடியாத தமிழ் கட்சிகள் தமிழர்களின் அபிலாசைகளை எப்போது நிறைவேற்றுவார்கள்? தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நாடகமாடும் இவர்களின் செயற்பாடு மக்களுக்கு எதையுமே பெற்றுக் கொடுக்கப்போவதில்லை என்பது திண்ணம்.

அரசியல் கட்சிகள் தங்களது இருப்பிற்கும் வாக்கு வங்கியை சரிய வீடாமல் காப்பாற்றுவதற்குமே இவ்வாறான வேலைத்திட்டங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிந்தித்து செயற்படுங்கள் எனவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து அழைப்பு விடுத்துள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கக் கோரி வடக்கு கிழக்கு முழுவதும் துண்டுப் பிரசுர விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: #Hartal#Protesting#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsjaffnasrilanka
Previous Post

லியோ படத்தை திரையிட வேண்டாம்: தமிழ் எம் பிக்கள் விஜய்க்கு கடிதம்?

Next Post

ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளில் ஒருவர் உயிரிழப்பு

Next Post
இலங்கையில் தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 6 ஆண் பிள்ளைகள்!

ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளில் ஒருவர் உயிரிழப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.