யாழ்ப்பாணம் – வடமராட்சி மாவிலங்கடி வீதியில் இருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் நேற்றைய தினம் (07-06-2023) முற்பகல் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் வேதார்வளவு, வியாபாரி மூலையைச் சேர்ந்த 81 வயதான வேலுப்பிள்ளை சேதுராமலிங்கம் என்பவராவார்.
மேற்படி வயோதிபர் மாவிலங்கடி வீதியில் அதிகாலை 12.30 மணியளவில் விழுந்து கிடந்ததை கண்ட இளைஞரொருவர் அவரை எழுப்ப முற்பட்ட சமயம் அவர் அசைவற்று காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பருத்தித்துறை பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டு பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
முற்பகல் சம்பவ இடத்திற்கு சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் ஒப்படைத்து பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பருத்தித்துறை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post