யாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழாவில், கொழும்பை சேர்ந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா இன்று (23) காலை இடம்பெற்ற போது பெருமளவான பக்தர்கள் கூடியிருந்தனர்.
கொழும்பு கொச்சிக்கடை பெண்கள்
இதனை சாதகமாக பயன்படுத்தி நகைத் திருட்டில் ஈடுபட்ட கொழும்பு கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்களே பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
பெண்ணொருவர் அணிந்திருந்த ரூ.6 இலட்சம் மதிப்புள்ள தாலிக்கொடியை அறுத்துக் கொண்டு இரண்டு பெண்கள் கூட்ட நெரிசலில் தலைமறைவாகியுள்ளனர்.
அங்கு சிவில் உடையில் கடமையிலிருந்த யாழ் மாவட்ட புலனாய்வுப் பிரிவினர் துரிதமாக செயற்பட்டு, கோயில் இளைஞர்களுடன் இணைந்து தேடுதல் நடத்தி, இரண்டு பெண்களையும் மடக்கிப் பிடித்தனர்.
அவர்கள் வைத்திருந்த குளிர்பான போத்தலுக்குள் தாலிக்கொடி மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது. புத்தளத்தை சேர்ந்த 35 வயதான இரண்டு பெண்களே மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.
கைதான சந்தேக நபர்களிடம் இருந்து நான்கரை பவுண் தாலிக்கொடி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. விசாரணைகளின் பின்னர் இருவரையும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Discussion about this post