யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி பகுதியில் இளைஞன் ஒருவர் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் நேற்று (05) அவரது வீட்டில் வைத்து மருதங்கேணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த இளைஞன் வடமராட்சி கிழக்கு, குடத்தனை மாளிகைக்திடல் கிராமத்தில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என கூறப்படுகின்றது.
தீவிர விசாரணை
சந்தேகநபர் நீதிமன்றங்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என்றும், பலருக்கு வாளால் வெட்டியமை, அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர் என்றும் காவல் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில், குறித்த சந்தேகநபர் வெவ்வேறு இடங்களில் தலைமறைவாக வசித்து வந்த நிலையில் நேற்று தனது தாயர் வீட்டிற்க்கு வந்திறங்கி சில நிமிடங்களில் அவரை மருதங்கேணி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், சந்தேக நபரிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் மருதங்கேணி காவல்துறையினர் அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post