Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழில் சோகத்தில் ஆழ்த்திய பட்டதாரி மாணவியின் மரணம்!

July 30, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
யாழில் சோகத்தில் ஆழ்த்திய பட்டதாரி மாணவியின் மரணம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பிய இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து
உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் வட்டுக்கோட்டை – சுழிபுரம் மத்தி பகுதியைச் சேர்ந்த 26 வயதான சற்குணரத்தினம் கௌசி என்ற
யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இளம் யுவதியின் உயிரிழப்பு தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த யுவதி சப்ரமுகவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் (27) பட்டமளிப்பு
விழா நடைபெற்றது.

இந்நிலையில் பட்டமளிப்பு விழா முடிந்து நேற்றையதினம் பெற்றோருடன் அவர் சுழிபுரத்தில் உள்ள வீட்டுக்கு வந்தார்.
இவ்வாறான நிலையில், தந்தை வெளியில் சென்ற நிலையில், தாயார் வீட்டு வேலைகளில்
ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை குறித்த யுவதி தூக்கில் தொங்கியுள்ளார்.

இதனை அவதானித்த தாயார் அவரை மீட்டு சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர்
ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சம்பவம் தொடர்பில் மரண விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் அவர்கள்,

உடற்கூற்று பரிசோதனைக்காக யுவதியின் சடலத்தை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.
உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தாய் மற்றும் தந்தை ஆகியோர் தங்களுக்குள் தொடர்ந்து முரண்பட்டு வரும் நிலையில் மன விரக்தி அடைந்த யுவதி
தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: #Graduate#Investigation#police#Suicide#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsjaffnasrilanka
Previous Post

ஓய்வை அறிவித்தார் நட்சத்திர பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிரோட்

Next Post

கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம்!

Next Post
கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம்!

கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.