Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழில் கடத்தப்பட்ட இளம் வியாபாரி மீட்பு: ஐவர் அடங்கிய கும்பல் கைது!

September 3, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
யாழில் கடத்தப்பட்ட இளம் வியாபாரி மீட்பு: ஐவர் அடங்கிய கும்பல் கைது!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் பழ வியாபாரி கடத்தப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் என்கிற குற்றச்சாட்டில் ஐந்து இளைஞர்கள் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், கிளிநொச்சி, கனகாம்பிகை குளம், கரடிப்போக்கு சந்தி, பரந்தன் ஆகிய பகுதிகளை சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய இளைஞர்கள் ஆவர். மேலும், கடத்தப்பட்ட நபரும் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வியாபாரி வான் ஒன்றில் வந்த கும்பலால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக நேற்று (02) நபரின் உறவினர்கள் கோப்பாய் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வானில் வந்த 12 பேர் அடங்கிய கும்பலே குறித்த வியாபாரியை கடத்திச் சென்றதாக உறவினர்கள் முறையிட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த வியாபாரி 3 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை நபர் ஒருவரிடம் வாங்கியதாகவும், அதனை அவர் மீள செலுத்தாத நிலையிலேயே வியாபாரி கடத்தப்பட்டுள்ளார் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இக்கடத்தல் கும்பல் கிளிநொச்சியில் மறைந்திருப்பதாக கோப்பாய் காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், கிளிநொச்சிக்கு விரைந்த காவல்துறையினர் ஆட்கடத்தலில் ஈடுபட்ட ஐவரையும் கைது செய்ததோடு, கடத்தப்பட்ட பழ வியாபாரியையும் மீட்டுள்ளனர்.

கைதான நபர்களை கோப்பாய் காவல்துறை நிலையத்தில் தடுத்துவைத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: #tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

இலங்கை அரசியலில் திடீர் குழப்பம்

Next Post

இன்றைய ராசிபலன்கள் 04-09-2023

Next Post
ரொறன்ரோவில் ட்ராக் வண்டியிலிருந்து கீழே வீழ்ந்த 5 மில்லியன் தேனீக்கள்!

இன்றைய ராசிபலன்கள் 04-09-2023

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.