சுமார் ஒரு வருடத்தின் பின்னர் யாழ்ப்பாணம் – நெடுந்தீவு போக்குவரத்து படகான நெடுந்தாரகை பயணிகள் படகு இன்றைய தினம் தனது சேவையை ஆரம்பித்துள்ளது.
படகில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப்பணிகளை தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களினால் , வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் நெடுந்தாரகை பயணிகள் படகு உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.
அதன்படி நெடுந்தீவு இறந்குத்துறைக்கு சென்ற ஆளுநர் , படகை பார்வையிட்டார். இதுவரை காலம் மாகாண சபையின் பொறுப்பில் காணப்பட்ட இந்த படகானது 52 மில்லியன் ரூபா செலவில் திருத்தப்பட்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பயணிகள் சேவையை மீண்சும் ஆரம்பித்துள்ள நெடுந்தாரகை படகு தினமும் சேவையில் ஈடுபடவுள்ளது. அதேவேளை நெடுந்தாரகை படகில் ஒரு தடவையில் 80 பேர் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post