நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பில் அந்த கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (mahinda rajapaksa)தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.
இதன்படி எந்த வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பில் நாளை திங்கட்கிழமை (29) அறிவிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வேட்பாளருக்கான ஆதரவு தொடர்பில் கட்சியின் அரசியல் குழு கூடி இந்த முடிவை எடுக்கும் என்றார்
ரணிலுக்கு ஆதரவு
ரணில் விக்ரமசிங்கவுக்கு(ranil wickremesinghe) ஆதரவளிக்க கட்சி தீர்மானித்தால், அதியுச்ச ஆதரவு அவருக்கு அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். வேறு வேட்பாளரை நியமிக்க கட்சி முடிவு செய்தால், அதற்கும் ஆதரவு அளிக்கும் என்றார்.
எம்.பிக்களுக்கு சுதந்திரம்
கட்சியின் சில எம்.பி.க்கள் தங்களது தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாகவும், அவர்கள் விரும்பியதைச் செய்வதற்கான சுதந்திரம் வழங்கப்பட்ட பின்னர் அது ஒரு பிரச்சினையாக இருக்காது என்றும் அவர் மேலும் கூறினார்.
Discussion about this post