தென் கொரியாவைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று ஜப்பானிய தீவின் அருகே சென்றபோது கடலில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில், கப்பல் சாயத் தொடங்கியதும் அதில் இருந்த ஊழியர்கள் கடலில் குதித்துள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்த ஜப்பான் கடலோரக் காவல்படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேடும் பணி
கடலில் தத்தளித்த நான்கு ஊழியர்கள் மீட்கப்பட்டதுடன் ஏழு பேரை காணவில்லை.
இதனடிப்படையில், அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் கியோயங் சன் என்ற ரசாயனக் கப்பல் கப்பலே கடலில் மூழ்கியதாகவும் காவல்படை தெரிவித்துள்ளது.
கப்பல் மூழ்கியது
மேலும், ஜப்பானின் முட்சுர் தீவுக்கு அருகில் தஞ்சம் அடைவதாகவும் தகவல் வந்ததன் அடிப்படையில் மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டதாக கடலோரக் காவல்படை குறிப்பிட்டுள்ளது.
அந்த கப்பலில் இந்தோனேசியாவைச் சேர்ந்த எட்டு பேர், தென் கொரியாவைச் சேர்ந்த இரண்டு பேர் மற்றும் சீனாவைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 11 ஊழியர்கள் பயணித்ததாக ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
அத்தோடு கப்பல் எப்படி மூழ்கியது என்ற விவரம் வெளியாகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post