தற்போதுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயங்காது என்று மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களமும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயங்காது என்றும் ஏனைய தினங்களில் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post